நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை – ஹீரோ அவதாரம் எடுத்த பாடலாசிரியர்

நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை – ஹீரோ அவதாரம் எடுத்த பாடலாசிரியர்
  • PublishedDecember 21, 2023

தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புசமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய பாடலிசிரியர் பிரியன், “அரணம் ஒரு பெரும் தவம். இந்தப்படம் எனக்கு மிகப்பெரும் அனுபவம். 20 வருடம் சினிமாவில் இருப்பவனையே இந்த அளவு அடிக்கிறார்கள் என்றால், புதிதாக சினிமாவுக்கு வருபவர்களை என்ன செய்வீர்கள்?”.

“ஒரு கலையை அந்த துறையிலிருந்து கொண்டே அழிப்பது சினிமாவில் தான். படம் எடுப்பது இப்போது மிகக் கஷ்டமாகிவிட்டது. படம் படைப்பாளிகள் கையில் இல்லை, கார்பரேட் கையில் இருக்கிறது.

நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை. ஒரு பெரிய படம் வந்தால் நன்றாக ஓடும் சின்னபடங்களை எடுத்து விடுகிறார்கள். ஆயிரம் தியேட்டரிலும் ஒரே படம் தான் ஓடுகிறது,” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *