அதுக்குள்ள விவாகரத்தா? பிரியங்கா சொன்ன பதில் என்ன தெரியுமா?

அதுக்குள்ள விவாகரத்தா? பிரியங்கா சொன்ன பதில் என்ன தெரியுமா?
  • PublishedFebruary 13, 2024

தமிழ், தெலுங்கு சீரியல்களில் நடிக்கும் நடிகை தான் நடிகை பிரியங்கா நல்காரி.

தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மனதை வென்றார்.

அந்த தொடர் முடிவுக்கு வர அடுத்து ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் கியூட்டான லுக்கில் நடித்து வந்தார்.

ஆனால் திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறியவர் சில மாதங்கள் பிறகு அதே தொலைக்காட்சியில் நள தமயந்தி தொடரில் நடிக்க தொடங்கினார்.

சீதா ராமன் தொடரில் நடித்துக் கொண்டிருந்த போது திடீரென மலேசியாவில் தனது நீண்டநாள் காதலரை கோவிலில் சிம்பிளாக திருமணம் செய்துகொண்டு புகைப்படங்கள் வெளியிட்டார்.

தற்போது திடீரென அவர் இன்ஸ்டாவில் தனது கணவருடன் வெளியிட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

அதோடு அண்மையில் இன்ஸ்டாவில் லைவ் வந்த பிரியங்காவிடம் நீங்கள் சிங்கிளா என ஒரு ரசிகர் கேட்க அதற்கு ஆமாம் என்று கூறியுள்ளார்.

இதனால் அவர் திருமணம் செய்த ஒரு வருடத்தில் தனது கணவரை பிரிந்துள்ளது தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *