விஜயின் கடைசி படம் – கவலையில் நடிகை

நடிகர் விஜய், தன்னுடைய கடைசி படமாக எச் வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். அரசியலில் ஈடுபடவுள்ளதால் சினிமாவில் இருந்து விலகி தவெக கட்சியை வழி நடத்தவுள்ளார். ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டே இரண்டாவது முறையாக ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் ஒரு ரசிகையாக தன்னை மிகவும் சோகத்தில் ஆழித்தியதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
மேலும் அவரை திரையில் அதிகமாக பார்க்க தான் விரும்புவதாகவும் ஆனால் அவரது அரசியல் எண்ட்ரிக்கு தான் சப்போர்ட் செய்வதாகவும் அவருக்கு அதிக வலிமை கிடைக்க விரும்புவதாகவும் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
சினிமா பயணத்தில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பூஜா, இந்த பயணத்தில் தான் அதிகமான தோல்விகளையும் அதிகமான வெற்றிகளையும் பெற்றதாக கூறியிருக்கிறார்.