புஷ்பா – 2… அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது புஷ்பா தி ரூல்.
இந்த படம் நாளைய தினம் சர்வதேச அளவில் 12,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பிரீ புக்கிங்கில் மட்டுமே புஷ்பா 2 படம் 100 கோடி ரூபாய்களை அள்ளியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
நாளைய தினம் படம் ரிலீசாகவுள்ள நிலையில், முதல் நாளிலேயே படம் 300 கோடி ரூபாய்களை சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் குறித்து பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை இல்லாத வரவேற்பை புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், அல்லு அர்ஜுனை பிளானட் ஸ்டார் என்று பாராட்டியுள்ளார்.
இதற்கான காரணங்களையும் அவர் தன்னுடைய பதிவில் அடுக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபீசை தகர்க்கும் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுன் 287.36 கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் அவர் உண்மையான உச்ச நட்சத்திரம் என்றும் பாராட்டியுள்ளார்.
மேலும் எந்த நடிகர்களுக்கும் அல்லு அர்ஜுனை போன்ற உயரங்கள் அமையாது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.