புஷ்பா – 2… பாக்ஸ் ஆபிஸில் அசுர வேட்டை
சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிந்திருந்த இந்த படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கின.
3 ஆண்டுகளாக படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் ரீலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புஷ்பா 2 படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் அது பாக்ஸ் ஆபீஸ் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புயலை கிளப்பி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை புஷ்பா 2 படம் பெற்றுள்ளது. முதல் நாளே பல படங்களின் சாதனையை முறியடித்தது. மேலும் முதல் நாளில் அதிக வசூல் செய்த ஹிந்தி படம் என்ற பெருமையையும் புஷ்பா 2 பெற்றுள்ளது. இதற்கு முன் ஷாருக்கானின் ஜவான் படம் முதல் நாளில் அதிக வசூல் செய்த ஹிந்தி படமாக இருந்தது.
இந்த படம் தற்போது மற்றொரு சாதனையை படைத்துள்ளது. புஷ்பா 2 படம் இரண்டே நாளில் உலகம் முழுவதும் ரூ.449 கோடி வசூல் செய்தது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வாரம் வேறு எந்த பெரிய படமும் வெளியாகததால் இந்த படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும். ரூ.1000 கோடி வசூல் படங்களில் இந்த படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படம் மொத்தம் ரூ.440 கோடி வசூல் ஆகும். ஆனால் புஷ்பா வெளியாகி 2 நாட்களிலேயே ரூ.449 கோடி செய்து கோட் படத்தின் லைஃப்டைம் வசூலை கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.