இன்று இரவு 1000 கோடி இலக்கை தொடும் Pushpa 2… அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அல்லு அர்ஜுன் நடித்த நடிப்பை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் இந்தியிலேயே 330 கோடி வசூலை புஷ்பா 2 படம் குவிக்க காரணமாக அமைந்து விட்டது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 9 நேற்று வரை 922 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ரூல் செய்து வருவதாக படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஷாருக்கானின் ஜவான், கல்கி 2898 ஏடி படங்கள் எல்லாம் லைஃப் டைம் வசூலாக 1000 கோடி ரூபாய் வசூலை கடந்த நிலையில், முதல் வாரத்திலேயே அந்த வசூல் சாதனையை புஷ்பா 2 படைக்கும் என தெளிவாக தெரிகிறது.
வார நாட்களிலும் புஷ்பா 2 படத்தின் வசூல் வட இந்தியா மற்றும் ஆந்திராவில் குறையவே இல்லை என்றும் கூறுகின்றனர். செவ்வாய்க்கிழமையான இன்று இரவுக் காட்சியுடன் புஷ்பா 2 திரைப்படம் 1001 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை 1000 கோடி ரூபாய் வசூல் போஸ்டரை புஷ்பா 2 படக்குழு வெளியிடும் என தெரிகிறது.
அல்லு அர்ஜுன் அடுத்து அட்லி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுனை வைத்து யார் இயக்கினாலும் சம்பளம் குறைந்தது 350 கோடி ரூபாயாக உயரும் எனக் கூறுகின்றனர். ஒரே வாரத்தில் 1000 கோடி வசூலை அல்லு அர்ஜுன் வசூல் செய்தால் எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் நம்பி அவர் மீது பெரிய தொகையை பெட் கட்டுவார்கள் என்றே கூறுகின்றனர்.
பிரபாஸை தொடர்ந்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறியுள்ளார்.