பயங்கரமான போஸ்டருடன் புதிய படத்தை அறிவித்தார் ஆர். ஜே.பாலாஜி

பயங்கரமான போஸ்டருடன் புதிய படத்தை அறிவித்தார் ஆர். ஜே.பாலாஜி
  • PublishedJune 20, 2024

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர்‌. பி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தில் ஆர். ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார் இப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில், ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார்.‌ இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் தயாரிப்பாளர்களும், ஃபேமிலி என்டர்டெய்னர் ஜானரிலான திரைப்படங்களை தொடர்ந்து அளித்து வரும் நடிகர் ஆர். ஜே. பாலாஜியும் இணைந்திருப்பதால், இவர்களின் கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டரில், ஆர்.ஜே.பாலாஜி செம்ம ரிச்சாக கோட் – ஷர்ட்டில் அமர்ந்திருக்க, அவரின் சட்டை முழுவதும் ரத்தமாக உள்ளது. மேலும், அவர் முன்பு கேக் அதன் மேல் ரத்த கரையுடன் கத்தி, பக்கத்தில் சரக்கு பாட்டில், தோட்டாக்களுடன் துப்பாக்கி, சுத்தி, போர்க், டிஸுஸ், என அந்த இடமே கொஞ்சம் ரணகளமாக உள்ளதால்… ஆர்.ஜே.பாலாஜி சைக்கோவாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *