தனுசுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு… வசூலின் உச்சத்தில் ராயன்
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை தானே இயக்கியுள்ளார். தனது 50வது படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது. படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிகப்பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் படம் ரூபாய் 100 கோடிகள் வசூலைப் படைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 3 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் முதல் இரண்டு நாள் வசூல் விபரம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் நாளில் ராயன் படம் அனைத்து மொழிகளிலும் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 13.65 கோடிகளை வசூல் செய்துள்ளது என கூறப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளில் முதல் நாளை விடவும் அதிகமாக ரூபாய் 20 லட்சம் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. அதாவது இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் என கிட்டத்தட்ட ரூபாய் 13 கோடியே 85 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் ராயன் படம் முதல் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ரூபாய் 27.5 கோடிகளை வசூல் செய்துள்ளது என திரைப்படங்களில் பாக்ஸ் ஆஃபீஸ் கணக்குகளை அளவிடும் வலைதளங்கள் தெரிவித்துள்ளன. ஆனாலும் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால் படம் கிட்டத்த ரூபாய் 30 கோடிகளை முதல் இரண்டு நாட்களிலேயே வசூல் செய்துள்ளதால் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது.
இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடும் தனுஷ்க்கு ராயன் படத்தின் வசூல் பிறந்த நாள் பரிசாக பார்க்கப்படுகின்றது.