5 நாட்களில் வாட்டர் பாக்கெட் பாடல் செய்துள்ள சாதனை…

5 நாட்களில் வாட்டர் பாக்கெட் பாடல் செய்துள்ள சாதனை…
  • PublishedAugust 11, 2024

நடிகர் தனுஷின் ராயன் படம் நாளுக்கு நாள் பல சாதனைகளைப் படைத்து வருகின்றது. அதாவது ராயன் படம் வசூலில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

இது மட்டும் இல்லாமல் படத்தின் திரைக்கதைப் புத்தகம் ஆஸ்கார் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வானது.

அதேபோல் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, ஓ ராயா பாடலை தனுஷ் மற்றும் ஏ.ஆர் ரகுமான் பாடி வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் ராயன் படத்தில் இடம் பெற்றுள்ள வாட்டர் பாக்கெட் பாடல் யூட்டூபில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இவரது இசையில் இந்தப் படத்தில், மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் படம் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டாவது பாடல் வாட்டர் பாக்கெட் பாடல்.

அந்த பாடல் லிரிக் வீடியோவாக ரிலீஸ் ஆனபோதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் வாட்டர் பாக்கெட் பாடலின் வீடியோ சாங் கடந்த 5ஆம் தேதி யூட்டூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த பாடல் யூட்டூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டதில் இருந்தே யூட்டூப்பில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் பாடல் வெளியாகி இன்றுடன் 6 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில், பாடல் இதுவரை யூட்டூபில் ஒரு கோடியே 12 லட்சங்களுக்கும் மேல் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தப் பாடலை, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகர் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் இந்தப் பாடலை கானா காதர் எழுதியுள்ளார். இந்த பாடல் படத்தின் முதற்பாதியில் வருகின்றது. இந்தப் பாடலை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் திரையரங்கிலேயே ஆட்டம் போட்டு கொண்டாடினர். இந்நிலையில் பாடல் வெளியாகி 5 நாட்களில் ஒருகோடியே 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தது படகுழுவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *