ராகவா லாரன்ஸை வெளிப்படையாக அசிங்கப்படுத்திய பிரபல நடிகை!
டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள ராகவா லாரன்ஸ் இப்போது கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ருத்ரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், இவரை பிரபல நடிகையொருவர் வெளிபடையாகவே அசிங்கப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்தார்.
அது யார் என்றால், ஸ்ரீ ரெட்டிதான். திரையுலகையே ஒரு காலத்தில் அதிர வைத்த பெருமை இவருக்கு உண்டு. பல ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் முகத்திரையை கிழித்த இவர் ராகவா லாரன்ஸ் பற்றியும் பல புகார்களை அடுக்கினார்.
அவர் தன்னை பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் ராகவா லாரன்ஸ் அந்த குற்றச்சாட்டை மறுத்து இவருக்கு வாய்ப்பு தருவதாக கூறினார்.
இதனால் அந்த பிரச்சனை அப்படியே ஓய்ந்து போனது. இப்படி லாரன்ஸை வெளிப்படையாகவே இவர் டேமேஜ் செய்தது கடும் விமர்சனங்களை முன் வைத்தது.