ரஜினியே தமன்னா மேல ஆசைப்படும் போது, மன்சூர் எல்லாம் என்னங்க?? கொளுத்திப் போட்ட பிஸ்மி
ரஜினியும் தமன்னாவிடம் தனது இச்சையை வெளிப்படுத்தியதாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.
மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய கருத்து தமிழ் திரையுலகில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. அவரது பேச்சுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி கொடுத்த சூழலில் கோலிவுட்டின் மற்ற கலைஞர்களில் சிலர் மட்டும் வாயை திறந்து கண்டித்திருக்கின்றனர்.
ஆனால் முன்னணி ஹீரோக்கள் யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேசமயம் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான சிரஞ்சீவி தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதனையடுத்து இன்று காலையில்கூட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை பலிகடா ஆக்கி நடிகர் சங்கம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறது. நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கிய சிகாமணிகளா. இன்னும் நான்கு மணி நேரத்துக்குள் கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் திரும்ப பெற வேண்டும் என கூறியிருக்கிறார்.
ஒருபக்கம் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் வலுத்து வர மறுபக்கம் விஜய், ரஜினி உள்ளிட்டோரே ஹீரோயின்களை ஆபாச தொனியில் பேசியிருக்கிறார்கள் என்ற குரல்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன.
உதாரணமாக 12 பி படத்தில் ஷாம் ஹீரோவாக அறிமுகமானபோது அவரிடம் விஜய், ‘யாருடா நீ முதல் படத்திலேயே ஜோதிகா, சிம்ரன்னு 2 குதிரைகளோட வர’ என்று கேட்ட விஷயம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த்தும் தமன்னாவிடம் தனது இச்சையை வெளிப்படுத்தியதாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஜெயிலர் விழாவில் ரஜினிகாந்த்தும் தமன்னாவிடம் கிட்டத்தட்ட மன்சூர் அலிகான் பாணியில்தான் பேசினார். அதுகுறித்து ஏன் பெரிதாக யாரும் குரல் எழுப்பவில்லை. அந்த விழாவில் தமன்னா குறித்து பேசியது ரஜினிகாந்த் இச்சையை வெளிப்படுத்தும் வார்த்தைதானே.
அது ரஜினியாக இருந்தால் என்ன மன்சூர் அலிகானாக இருந்தால் என்ன.ஒரு பெண் குறித்து அதுவும் ஒரு நடிகை குறித்து இந்த மாதிரி கேவலமான எண்ணம் உங்களுக்குள் இருக்கிறது என்பதை வெள்ப்படுத்தும் பேச்சுதான் அது.
எனவே இதுபோன்ற பேச்சுக்கள் எந்தக் காலத்திலும் யாரும் பேசக்கூடாது” என்றார். முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, “தமன்னாவுடன் நடனம் ஆடலாம் என்று ஆசையாக வந்தேன். ஆனால் அவருடன் எனக்கு காம்பினேஷனே இல்லை” என்கிற தொனியில் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.