அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் ரஜினிகாந்த்.. ஆல்ரவுன்ட் கட்டும் சூப்பர்ஸ்டார்

அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் ரஜினிகாந்த்.. ஆல்ரவுன்ட் கட்டும் சூப்பர்ஸ்டார்
  • PublishedJune 25, 2024

நடிகர் ரஜினிகாந்த் 70 வயதை கடந்த நிலையிலும் இளம் இயக்குனர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி இணையவுள்ள கூலி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் ரஜினி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சல்மான் கான் -அட்லி கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள புதிய பாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் முன்னணி கேரக்டரில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தான் மிகப்பெரிய ரஜினி வெறியன் என்று அட்லி முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்த நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் ரஜினியையும் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மானையும் இணைக்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் சஜித் நடியாவாலா தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பாலிவுட்டில் ரஜினி கமிட் ஆகவுள்ள நிலையில் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அவர் இணையுள்ளதாக கூறப்பட்டுள்ள ஜெயிலர் 2 படம் எப்போது சூட்டிங் துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி இணையுள்ள கூலி படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக பட குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

 ni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *