ரஜினி சிறந்த நடிகரா : சர்ச்சையில் சிக்கிய அமீர்!

ரஜினி சிறந்த நடிகரா : சர்ச்சையில் சிக்கிய அமீர்!
  • PublishedMarch 19, 2023

இயக்குனர் அமீர் எப்போதுமே ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்க கூடியவர். அந்த வகையில் இப்போதும் ரஜினியை பற்றி பேசி பிரச்சனையை கிளப்பி உள்ளார்.

அதாவது சமீபத்திய பட விழா ஒன்றில் கலந்து கொண்ட அமீர் இடம் பத்திரிக்கையாளர்கள் ஆஸ்கர் விருதை பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர்.

விருதை பொருத்தவரையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் இப்போது கொடுக்கும் விருதுகள் எல்லாம் லாபி தான் என்றும் பேசி இருந்தார்.

மேலும் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கப்பட்டது. ரஜினி சிறந்த நடிகரா என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்களிடம் அமீர் எழுப்பினார்.

அதாவது ரஜினி ஒரு சிறந்த என்டர்டைனர் என்பதை ஒற்றுக்கொள்ளலாம். ஆனால் சிவாஜி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்பதை ஏற்க முடியாது. அதுவும் 2007 ஆம் ஆண்டு வெளியான படங்களில் சிவாஜி படம் தான் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததா என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார். தற்போது அவரின் இந்த கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *