மீண்டும் நெல்சனுடன் இணையும் ரஜினி! அப்போ லோகேஷின் நிலை என்ன?

மீண்டும் நெல்சனுடன் இணையும் ரஜினி! அப்போ லோகேஷின் நிலை என்ன?
  • PublishedOctober 12, 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய்லர் படம்தான் ரஜினி நடித்ததில் அதிக வசூல் அள்ளிய படம் என்ற இடத்தில் உள்ளது.

இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால் என பலரும் நடித்திருந்தனர்.

மேலும், உலகளவில் ரூ. 620 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்திடம் மற்றொரு கதையை நெல்சன் கூறியுள்ளார்.

அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக, ஜெயிலர் 2 படத்திற்கு பின் மீண்டும் நெல்சன் உடன் இணைய ரஜினிகாந்த் யோசித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி – கமல் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், எந்த படம் முன்னுக்கு வெளிவரும் என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *