இந்தியன் – 2 எப்படி இருக்கு? ரஜினி என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

இந்தியன் – 2 எப்படி இருக்கு? ரஜினி என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
  • PublishedJuly 22, 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் குறித்தும், தனது வரவிருக்கும் படங்களான ‘கூலி’ மற்றும் ‘வேட்டையன்’ பற்றியும் பதில் அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கேரளாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினர். அப்போது, விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த செய்தியாளர்கள், ‘இந்தியன் 2’ படம் பார்த்தீர்களா படம் எப்படி இருக்கு என்று கேட்டனர், அதற்கு அவர், படம் பார்த்தேன், நன்றாக இருக்கிறது என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து ‘வேட்டையன் ரிலீஸ் தேதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன என்றார். முன்னதாக, ‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜூன் மாதம் இமயமலைக்கு தனது யாத்திரை சென்ற போது, “‘வேட்டையன்’ தசரா பாண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என கூறியிருந்தார்.

தற்போது, இன்னும் ரிலீஸ் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளதால், வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி அல்லது அதன் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *