“சார் விஜய் கொடி எப்படி?” ஒரே வாத்தையில் பதில் சொன்ன ரஜினி

“சார் விஜய் கொடி எப்படி?” ஒரே வாத்தையில் பதில் சொன்ன ரஜினி
  • PublishedAugust 26, 2024

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அந்த வகையில் விஜய் தனது நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ள விடயம் அனைவருக்கும் வருத்தத்தை தந்தாலும், அவரது அரசியல் பயணத்திற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் விஜள் தனது அரசியல் கட்சியில் கொடி மற்றும், பாடலை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இடம்பெற்றது.

யானைகள், வாகைப்பூ, நட்சத்திரங்கள் என அந்த கொடியில் பல விஷயங்கள் இடம்பெற்று இருந்தது.

கொடி வெளியான நாளில் இருந்தே பல சர்ச்சைகளும் இருந்து வருகிறது. இந்த கொடிக்கு எதிராக சில முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ரஜினி இன்று ஏர்போர்ட் வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் ஆகி இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.

‘அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று மட்டும் கூறிவிட்டு ரஜினி அங்கிருந்து சென்றுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *