அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்? இனி எல்லாம் வைத்தியரின் கைகளில் தான்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆக உள்ளது. இதனை ஒட்டி தனது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக அடுத்த ஆண்டு இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. இதை அடுத்து அவர் ஜெயிலர் டு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
தற்போது செய்யாறு பாலு தெரிவித்துள்ள தகவல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது எனலாம்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
ரஜினிகாந்த் தனது அறுவை சிகிச்சைக்கு பின்னர் சுமார் மூன்று மாத காலம் ஓய்வெடுக்க உள்ளார் என கூறியுள்ளார். தனது முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், உடல் பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே நடந்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் செய்யார் பாலு தெரிவித்துள்ளார்.
இவரது இந்த பேச்சு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.