16 வயசுலயே இப்படியா? வசமாக சிக்கிய தனுஷ் மகன்… வைரலாகும் புகைப்படம்

16 வயசுலயே இப்படியா?  வசமாக சிக்கிய தனுஷ் மகன்… வைரலாகும் புகைப்படம்
  • PublishedNovember 16, 2023

நடிகர் ரஜினிகாந்தின் பேரனும் நடிகர் தனுஷின் மகனுமான யாத்ரா 16 வயதிலேயே பைக் ஓட்டும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளன.

வயசு பசங்க இப்படி வீட்டின் அருகே பைக் ஓட்டி பழகுவதில் எந்த தவறும் இல்லையே என தனுஷ் ரசிகர்களும் கமெண்ட் போட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அண்ணன் செல்வராகவன் கதையில் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ். அடுத்து அண்ணன் செல்வராகவன் எழுதி இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடித்த தனுஷ் திருடா திருடி படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக உருவானார். புதுப்பேட்டை முதல் நானே வருவேன் வரை இப்போதும் அண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக் கொண்டு 17 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கருத்து மோதல் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

ஆனாலும், தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவை தொடர்ந்து கவனித்துக் கொள்கிறார் தனுஷ். அம்மாவிடம் வளர்ந்து வந்தாலும், அப்பாவையும் அடிக்கடி சந்தித்தும் அவருடன் நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷின் மகனும் ரஜினிகாந்தின் பேரனுமான யாத்ரா லைசென்ஸ் இல்லாமல் 16 வயதிலேயே போயஸ் கார்டனில் பைக் ஓட்டி வருவதாக புகைப்படங்களை ஷேர் செய்து சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *