170 ஆவது படத்திற்கு தயாராகும் ரஜினிகாந்த்!

170 ஆவது படத்திற்கு தயாராகும் ரஜினிகாந்த்!
  • PublishedJuly 15, 2023

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின்   ப்ரமோஷன் வேலைகள் ஒரு பக்கம் ஜோராக நடந்து கொண்டிருக்கின்றது.

இப்படத்தை முடித்துக் கொடுத்த கையோடு சூப்பர் ஸ்டார் தன் மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க சென்றார். மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்து வந்த அவர் தற்போது தன்னுடைய காட்சிகளை எல்லாம் முடித்துக் கொடுத்து விட்டார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் போட்டோவுடன் வெளியானது.

rajini-latest

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன்பாக ஜாலியாக ஒரு ட்ரிப் சென்றுள்ளார். இந்த இரு படங்களை தொடர்ந்து அடுத்ததாக இவர் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் கூட்டணியில் தலைவர் 170 பாடத்தில் நடிக்க இருக்கிறார்.

ஆனால் அதற்கு முன்பாக அவர் ஒரு புத்துணர்ச்சிக்காக இப்போது மாலைதீவுக்கு சென்றுள்ளார். இலங்கை வழியாக மாலைத்தீவுக்கு செல்லும் சூப்பர் ஸ்டாருக்கு இலங்கையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த போட்டோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

rajinikanth-actor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *