கடைசி படத்தை விரைவில் அறிவிக்க காத்திருக்கும் ரஜினி?

கடைசி படத்தை விரைவில் அறிவிக்க காத்திருக்கும் ரஜினி?
  • PublishedMarch 22, 2025

ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்து நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு ரஜினியை இயக்கப்போவது கார்த்திக் சுப்பராஜ்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் ரஜினியை திடீரென சந்தித்து பேசினார்கள்.

அவர்களுடன் நெல்சனும் இருந்துள்ளார். தற்போது நடித்து வரும் படம், அடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து இவர்கள் இணைந்து பேசியதாக கூறப்படுகிறது.

உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனது கடைசி படத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறார் என்றும், அந்தபடம் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும், அதில் கமல்ஹாசனும் நடிக்க ரஜினி விரும்புவதாகவும், அதற்கேற்ப ஒரு கதையை லோகேஷ், நெல்சன், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இணைந்து உருவாக்க வேண்டும் என்று ரஜினி விரும்புவதாகவும், அதனால் இந்த சந்திப்பு நடந்தாகவும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *