பாபாஜி குகையில் தியானத்தில் மூழ்கினார் ரஜினிகாந்த்

பாபாஜி குகையில் தியானத்தில் மூழ்கினார் ரஜினிகாந்த்
  • PublishedOctober 9, 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 4ஆம் திகதி முதல் இமயமலை பயணம் மேற்கொண்டார்.

முதலில் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கி பின்பு பத்ரிநாத் சென்றார்.

பத்ரிநாத் செல்லும் வழியில் சாலையோரம் அவர் சாப்பிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இதனைத் தொடர்ந்து தற்போது பாபாஜி குகைக்கு சென்றுள்ளார். அங்கு போகும் முன் அவருக்கு பாபாஜி சிலை பரிசாக வழங்கப்பட்டது. பின்பு குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார்.

ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பும் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக இடைப்பட்ட காலங்களில் மற்றும் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் இமயமலை போகாமல் இருந்தார்.

இந்த நிலையில் அனைத்து நிலைமைகளும் சீரானதையடுத்து மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *