நண்பனின் மனைவிக்கு ரஜினி செய்த உதவி!
சரத் பாபுவின் மனைவிக்கு ரஜினி செய்துள்ள உதவி இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ,
பெரும்பாலும் ரஜினியின் படங்களில் சரத்பாபு நண்பராகத்தான் நடித்திருப்பார். இந்நிலையில் சரத்பாபுவின் முதல் மனைவி பிரபல நடிகை ரமா பிரபாவிற்கு ரஜினி செய்த உதவிதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒரு காலத்தில் சினிமாவில் உச்சத்தில் இருந்த ரமா பிரபா ஊருக்கு செல்ல பேருந்திற்கு பணம் கூட இல்லாமல் நிற்கதியாக நின்று இருக்கிறார். அப்போதுதான் ரஜினியின் ஞாபகம் இவருக்கு வந்திருக்கிறது.
சரத்பாபு உடன் அவர் இருந்த நேரத்தில் ரஜினி இடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவரிடம் போய் உதவி கேட்டிருக்கிறார்.
அந்தச் சமயத்தில் தான் ஒரு படத்திற்கான அட்வான்ஸ் தொகை 40 ஆயிரத்தை ரஜினி வாங்கி இருக்கிறார். ரமா பிரபாவின் நிலைமையை பார்த்து பரிதாப பட்ட ரஜினி உடனே அந்த பணத்தை அப்படியே எடுத்துக் கொடுத்து விட்டாராம். இவ்வளவு தொகை தனக்கு வேண்டாம் என்று ரமா பிரபா கூறியிருக்கிறார்.
ஆனால் ரஜினி வலுக்கட்டாயமாக அந்த பணத்தை அவரிடம் கொடுத்தாராம். அதன் பிறகு தனது சொந்த ஊரான மதனப்பள்ளிக்கு சென்று தொழில் தொடங்கி நல்ல நிலைமையில் ரமா பிரபா இருந்தார். நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.