ரஜினியைப் பார்க்க கடலென திரணடட மக்கள்… பொங்கியெழுந்த பக்கத்து வீட்டுக்காரர்…

ரஜினியைப் பார்க்க கடலென திரணடட மக்கள்… பொங்கியெழுந்த பக்கத்து வீட்டுக்காரர்…
  • PublishedJanuary 15, 2024

பொங்கல் திருநாளான இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது வீடு முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த நிலையில், அங்கு கூடிய ரசிகர்களால் பக்கத்து வீட்டாருக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறிய பெண்மணியின் வீடியோ வெளியாகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தனது வீட்டு முன் திரளும் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார். அந்த வகையில், தைத்திங்கள் முதல் நாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ரசிகர்கள் அவரைக் காணக்கூடியிருந்தனர்.

அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன்பு கையசைத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

இதன் தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும் என ரஜினி தெரிவித்தார்.

இந்த நிலையில், தான் ரஜினிகாந்த் வீட்டின் பக்கத்து வீட்டார், தலைவா இறைவான்னு வருவாங்க….எங்களை மாதிரி இங்கு இருக்கும் 21 வீட்டுக்காரங்களும் கஷ்டப்படுற மாதிரி ஒருத்தரும் கஷ்டப்பட மாட்டாங்க.

உங்க கேட்ட திறந்து உள்ளே விடுங்க. உங்க கேட்டு திறக்க கூடாது. எங்க வாசல் மூடி இப்படியே இருக்கணும். உங்க கேட்டை திறந்து எல்லோரையும் உள்ளே விடுங்கள் என்று ரஜினிகாந்த் வீட்டின் செக்யூரிட்டிகார்டிடம் அந்த பெண்மணி இவ்வாறு கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *