கமல் படத்துடன் இப்போதும் மோதத் துடிக்கும் ரஜினிகாந்த்? என்ன படங்கள் தெரியுமா?

கமல் படத்துடன் இப்போதும் மோதத் துடிக்கும் ரஜினிகாந்த்? என்ன படங்கள் தெரியுமா?
  • PublishedJuly 31, 2024

ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள வேட்டையன் திரைப்படம் கமல்ஹாசன் படத்துடன் போட்டிப் போட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந் நிலையில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படத்துடன் வேட்டையன் திரைப்படம் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்துடன் கிளாஷ் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

சூர்யாவுடன் மோதலை தவிர்த்த சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்துடன் மோத போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகப் போவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதற்கு போட்டியாக அக்டோபர் 30-ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. விரைவில் லைகா நிறுவனம் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *