திருமணத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு மாப்பிள்ளை போட்ட கண்டிஷன்

திருமணத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு மாப்பிள்ளை போட்ட கண்டிஷன்
  • PublishedFebruary 20, 2024

கடந்த சில வருடங்களாக தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பாக்னானியுடன் டேட்டிங் செய்து வந்த ரகுல் ப்ரீத் சிங், பிப்ரவரி 21-ஆம் தேதி, அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களின் திருமணம், கோவாவில் இயற்க்கை எழில் சூழ்ந்த இடத்தில் நடைபெற உள்ளது.

இந்த திருமணம் குறித்த, சில சுயராஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த விஷயங்களில் மாற்றங்கள் கூடாது என, ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு கண்டீஷன் போட்டு இதையெல்லாம் செய்துள்ளாராம் ஜாக்கி பாக்னானி.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரகுல் ப்ரீத் சிங் காதலர் ஜாக்கி பாக்னானி, தன்னுடைய திருமண அழைப்பிதழை கூட, எந்த விதத்திலும் மாசுபடுத்தாத வண்ணம் டிஜிட்டல் முறையிலேயே அனைவரும் அனுப்பியுள்ளாராம்.

அதே போல் திருமணத்தை பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ள ஜாக்கி பாக்னானி, அதற்க்கு பதிலாக, மரம் நடுவது போன்ற நல்ல விஷயங்களை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்திற்க்கு வருபவர்களுக்கும் செடிகள், விதைகள் போன்றவரை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவுகளில் கூட gluten free மற்றும் sugar free ஆக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர். அதே போல் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளையே தங்களின் உறவினர்களுக்கு பரிமாற்ற உள்ளார்களாம். மேலும் இதில் பாரம்பரியமான உணவுகளையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் மெனு மற்றும் கொள்கைகளுக்கு ஏற்றது போலவே தான் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி ஆகியோர் திருமணம் கோவாவில் சுற்றுச்சூழலுடன் கூடிய இடத்தில் நடைபெற உள்ளது. இவர்களின் இந்த பசுமை திருமணம் குறித்து வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து, பலர் தங்களின் ஆச்சர்யங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *