திருமணத்திற்கு முன்பே வரதட்சணை வாங்கிய…ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். அவர் படங்களை விட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலமாக தான் அதிகம் பிரபலம் ஆனார்.
குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் கடந்த வருடம் காதலர் லவெல் தவான் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
வழக்கமாக பெண் வீட்டார் தான் மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுப்பார்கள். ஆனால் இந்த திருமணத்தில் அப்படியே தலைகீழாக நடைபெற்று இருக்கிறது.
மாப்பிள்ளை வீட்டார் தான் வரதட்சணை கொடுத்தார்களாம். அந்த விஷயத்தை ரம்யா பாண்டியனின் அம்மாவே பேட்டியில் கூறி இருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பே லட்சங்களில் ஒரு பெரிய தொகையை கொடுத்து அதற்கு நகை வாங்கிக்கொள்ளும்படி மாப்பிள்ளை வீட்டில் கூறினார்களாம். அதனால் திருமணத்திற்கு தாங்கள் பெரிதாக எந்த செலவும் செய்யவில்லை என ரம்யா பாண்டியனின் அம்மா கூறி இருக்கிறாராம்.