திடீரென லைட் ஆஃப்.. அலறிய ரம்பா… கடைசியில் பார்த்தா ரஜினிகாந்த்

திடீரென லைட் ஆஃப்.. அலறிய ரம்பா… கடைசியில் பார்த்தா ரஜினிகாந்த்
  • PublishedJanuary 3, 2024

நடிகை ரம்பா அருணாச்சலம் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் ரஜினிகாந்த் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார் என்பதை சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த், செளந்தர்யா நடித்த அருணாச்சலம் படத்தில் விசுவின் மகளாகவும் செகண்ட் ஹீரோயினாகவும் ரம்பா நடித்திருப்பார்.

ஆனால், அந்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்தின் எந்தவொரு படத்திலும் ரம்பா நடித்திருக்க மாட்டார். அதற்கு காரணம் அந்த படத்தில் அவருக்கு நேர்ந்த சில இன்னல்கள் தான் என்று சில தகவல்களை கிளப்பி விட்டுள்ளனர்.

அருணாச்சலம் படத்தின் சூட்டிங் சமயத்தில் நடிகர் ரஜினிகாந்தை பார்க்க சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் வந்திருந்தனர். சல்மான் கான் உடன் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்துள்ளேன்.

அதனால் அவரை பார்த்ததும் மும்பையில் வழக்கமாக ஹீரோக்களை பார்த்தால் கட்டிப்பிடித்து வணக்கம் வைப்பது வழக்கம். அதையே தான் நானும் செய்தேன். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் நான் திரும்பி வந்ததும் தனது தோளில் இருந்த துண்டை கீழே கோபமாக போடுவது என செட்டில் திடீரென டென்ஷன் ஆகி விட்டார் ரஜினிகாந்த்.

அதுவரை அப்படி பார்க்கவே இல்லை. எல்லோரும் ரஜினியை பார்க்கின்றனர். அப்படியே திரும்பி என்னை பார்க்கின்றனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு காரணம் நான் தான் என சொன்னதுமே அழுதுவிட்டேன். பின்னர் யாருடா குழந்தையை அழ வச்சது என ரஜினி பேசியதும் தான் நிம்மதியடைந்தேன்.

நமக்கெல்லாம் செட்ல ரம்பா எப்படி வணக்கம் வைப்பாங்க என அப்படியே நடித்துக் காட்டிய ரஜினிகாந்த், சல்மான் கானுக்கு எப்படி வணக்கம் வச்சாங்க என அப்படியே ஒருவரை வைத்துக் கொண்டு நடிச்சுக் காட்டினார்.

மேலும், தென்னிந்தியர்கள் எல்லாம் என்ன இளிச்சவாயனுங்களா, உங்க ஆட்களுக்கு மட்டும் கட்டிப்புடிச்சு வணக்கம் வைப்பீங்களா எனக் கேட்டார் என்றார்.

இன்னொரு நாள் திடீரென சூட்டிங் ஸ்பாட்டில் லைட் ஆஃப் ஆகிடுச்சு, யாரோ என் முதுகில் தட்டி விட்டு போனது போல இருந்தது. உடனே கத்திட்டேன். லைட் மீண்டும் ஆன் ஆனவுடன் ரம்பா பின்னாடி தட்டினது யாருடா என ரஜினி சாரே ஒரு பஞ்சாயத்து டிராமா போட்டார். அப்படித்தான் செட்டில் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பார் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரம்பா பேட்டியை வைத்து #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி எனும் ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பதிலுக்கு கீர்த்தி சுரேஷ் விஜய் பற்றி பேசிய ஒரு ஆடியோவை ரஜினிகாந்த் ரசிகர்கள் ஷேர் செய்து போட்டிப் போட்டு இரு பெரிய நடிகர்களையும் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *