ராஷ்மிகாவை புரட்டி எடுத்த அல்லு அர்ஜுன்… இனி விஜய் தேவரகொண்டாவின் நிலை என்ன?
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளே 200 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
இந்த படத்தில் சில காட்சிகளில் அல்லு அர்ஜுனும், ராஷ்மிகாவும் எல்லை மீறி நடித்திருப்பார்கள். இதுகுறித்து பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன்,
இந்த படத்தை மட்டும் விஜய் தேவரகொண்டா பார்த்தால், காதல் பிச்சிக்கும் என்று பேசி உள்ளார்.
நடிகை ராஷ்மிகா சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நிச்சயதார்த்தம் நடந்து அது நின்று போனது. அதன் பிறகு தான் மாடலிங் பக்கம் சென்ற ராஷ்மிகா சினிமாவிற்கு வந்தார். அவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவிற்கு வந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன், கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார்.
அவர் நடித்த புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது புஷ்பா 2 திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த படம், ஆர்.ஆர்.ஆர், பாகுபலி போன்ற படங்கள் அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் கலெக்ஷனை அள்ளி வருகிறது.
ஆனால் இந்த படம் ராஷ்மிகாவிற்கு மிகப்பெரிய மைனஸ் திரைப்படமாக அமைந்துவிட்டது என்று தான் சொல்லுவேன். ஏன்னென்றால், ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
அண்மையில் தீபாவளி பண்டிகையை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் கொண்டாடினார் என்ற செய்திகள் இணையத்தில் வெளிவந்தன. இந்த நேரத்தில் ராஷ்மிகா, புஷ்பா 2 படத்தில், அல்லு அர்ஜுனுடன் அளவுக்கு மீறிய கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.
முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என அனைத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.
இந்த படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவின் திருமணம் நடக்குமா? நடக்காதா என்று சந்தேகப்படும் அளவிற்கு அதிகமான கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் ராஷ்மிகா.
ஒருவரை காதலித்து வரும் ராஷ்மிகா, இன்னொருவரின் மனைவியாகும் போது ராஷ்மிகா இது போன்ற கவர்ச்சியில் எல்லை மீறி நடிக்கலாமா? புஷ்பா 2 படத்தை பார்த்த பிறகு விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினர் ராஷ்மிகாவை மருமகளாக ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படியே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்கு பிறகு ராஷ்மிகா நடிக்க கூடாது என்று தடைவிதித்தால் மட்டும் தான் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும் இல்லை என்றால் நாக சைதன்யா சமந்தா நிலைதான் வரும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.