ரஷ்மிகா நீக்கப்பட்டமைக்கான காரணம் இதுதான்

ரஷ்மிகா நீக்கப்பட்டமைக்கான காரணம் இதுதான்
  • PublishedApril 12, 2025

அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து வசூலில் மாபெரும் வெற்றி படங்களை ராஷ்மிகா மந்தனா கொடுத்து வந்தார்.

வசூல் நாயகியாக வலம் வந்த ராஷ்மிகா தற்போது டாப் நடிகர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சிக்கந்தர்.

சல்மான் கானின் ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கியிருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. கமர்ஷியலாக படுதோல்வியை இப்படம் சந்தித்துள்ள நிலையில், பிரபாஸ் படத்திலிருந்து ராஷ்மிகா மந்தனா வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ஸ்பிரிட். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருந்த நிலையில், சிக்கந்தர் தோல்வி காரணமாக இப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *