ராஷ்மிகாவுடன் நிச்சயதார்த்தம்? மௌனம் கலைத்தார் விஜய்

ராஷ்மிகாவுடன் நிச்சயதார்த்தம்? மௌனம் கலைத்தார் விஜய்
  • PublishedJanuary 19, 2024

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தன்னா இருவரும் நிச்சயதார்த்தம் செய்ததாக சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எதிர்வரும் பெப்ரவரியில் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் என்று வதந்தி பரவியது.

விஜய் தேவரகொண்டா, லைஃப்ஸ்டைல் ஆசியா உடனான சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது தொடர்பான உண்மையை தெரிவித்துள்ளார்.

இந்த ஜோடி நிச்சயதார்த்தத்துடன் தங்கள் உறவை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லைஃப்ஸ்டைல் ஆசியா உடனான சமீபத்திய நேர்காணலில்,

“பெப்ரவரியில் எனக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ நடக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்திரிகைகள் நினைக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியை நான் கேட்கிறேன். அவர்கள் என்னைப் பிடித்து திருமணம் செய்துவைக்க காத்திருக்கிறார்கள்.“ என தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளனர். இரண்டு படங்களும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கடைசியாக ‘குஷி’ படத்தில் நடித்த விஜய், தற்போது ‘குடும்ப நட்சத்திரம்’ மற்றும் இயக்குனர் கௌதம் தின்னனுரியின் ‘விடி 12’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *