மீண்டும் மகனுடன் இணையும் ரவி – இயக்குனராக எடுக்கும் அவதாரம்

மீண்டும் மகனுடன் இணையும் ரவி – இயக்குனராக எடுக்கும் அவதாரம்
  • PublishedJanuary 17, 2025

சமீபகாலமாக ரவி மோகன் நடிப்பில் வெளியாகி வரும் எந்தப் படமும் பெரியளவிற்கு ஹிட் கொடுப்பதில்லை. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த பிரதர் படம் வெளியாகி பெரியளவில் ஓடவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த காதலிக்க நேரமில்லை படமும் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இதுவரையில் சோலோவாக நடித்து வந்த ரவி மோகன் இப்போது ஹிட் கொடுக்க இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் லீடு ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் அதர்வாவும் நடிக்கிறார்.

இந்த நிலையில் தான் மீண்டும் தனது மகன் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடித்த டிக் டிக் டிக் 2018 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் ரவி மோகனின் ஆரவ் ரவி நடித்திருந்தார்.

இப்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ரவி மோகன் கூறியிருப்பதாவது:

நடிகராக இல்லை என்றால் நான் இயக்குநராக மாறியிருப்பேன். அதற்கு ஏற்ப நானும் என்னுடைய மகனும் நடிக்கும் கதை ஒன்றை என்னுடைய அப்பா வைத்திருக்கிறார். என்னுடைய இயக்கத்தில் கூட நானும் அவனும் ஒரு படத்தில் இணைந்து நடிப்போம் என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என்ற மாற்றிய நிலையில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *