பராசக்தியைத் தொடர்ந்து பெரிய படங்களை தட்டித்தூக்கிய புதிய வில்லன்

பராசக்தியைத் தொடர்ந்து பெரிய படங்களை தட்டித்தூக்கிய புதிய வில்லன்
  • PublishedAugust 27, 2025

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி படத்தின் மூலம் வில்லனாக மிரட்ட இருக்கிறார் ரவி மோகன். அந்தப் படத்தில் அவர் கேரக்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெரும் என்று பேசப்படுகிறது. அவருடைய அசத்தலான நடிப்பின் காரணமாக அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு வரத் தொடங்கிவிட்டது.

அடுத்து, தற்போது உருவாகி வரும் “பென்ஸ்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடித்துள்ளார்.

அதுவே போதாதென, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள “கைதி 2” மற்றும் “விக்ரம் 2” படங்களிலும் முழு வில்லனாக நடிக்கிறார் ரவி மோகன். லோகேஷ் உருவாக்கிய LCU (Lokesh Cinematic Universe)-இல் வில்லன் இடத்தை பிடிப்பது எந்த நடிகருக்கும் பெரிய வாய்ப்பு.

இதில் ரவிமோகன் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகிறார்கள்.

இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு சமமான முக்கியத்துவம் வில்லனுக்கும் கிடைக்கிறது. விஜய் சேதுபதி “விக்ரம்”-இல், அர்ஜுன் தாஸ் “கைதி”-யில், ஹரிஷ் உத்தமன் “விக்ரம்” தொடரில் தங்கள் வில்லன் வேடங்களால் ரசிகர்களை கவர்ந்ததை போல, அடுத்த வில்லன் ஐகானாக ரவி மோகன் மாறப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *