சர்ச்சைகளுக்கு மத்தியில் மகன்களை சந்தித்த ரவி மோகன்… ஆர்த்தியின் பதிலடி

சர்ச்சைகளுக்கு மத்தியில் மகன்களை சந்தித்த ரவி மோகன்…  ஆர்த்தியின் பதிலடி
  • PublishedJune 30, 2025

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் கூறியிருந்தார்.

அதன் பின், பாடகி கெனிஷாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் ஒருவறை ஒருவர் குறை கூறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

ஆனால், தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை பற்றி அறிக்கை எதுவும் வெளியிட கூடாது என நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. தற்போது, ரவி மோகன் – ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து வழக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு நடுவில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் வெளியில் சுதந்திரமாக சுற்றத் தொடங்கினார்.

இந்த நிலையில் நேற்று ரவி மோகன் தனது இரண்டு மகன்களையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

மூத்த மகன் ஆரவ் பிறந்தநாள் என்பதால் மகன்களை சந்தித்து அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.

மேலும், ஆர்த்தியும் தனது மகனுடன் இருக்கும் வகையிலான புகைப்படத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *