காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு?
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்து இன்று வெளியான படம் தான் காதலிக்க நேரமில்லை.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் மூலமாக உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவி மோகன் உடன் இணைந்து யோகி பாபு, வினய் ராய், சுனில், சடகோபன் ரமேஷ், வினோதினி வைத்யநாதன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்
படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான உறவில் ரொம்ப முக்கியமான ஒரு பகுதியை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. ரொம்பவே நன்றாகவே வந்திருக்கு. உணர்வுப்பூர்வமான ஒரு படம். எதிர்கால வாழ்க்கையை இந்தப் படம் கனெக்ட் செய்கிறது. பொங்கலுக்கு ஏற்ற ஒரு படமாக காதலிக்க நேரமில்லை இருக்கும் என்று கூறியுள்ளார்.
மாரி செல்வராஜைத் தொடர்ந்து இயக்குநர் ஏ எல் விஜய் படம் பற்றி கூறியிருப்பதாவது:
படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும் நன்றாகவே வந்திருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் தான் ஹீரோ. கண்டிபபா இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்