லைகாவை தொடர்ந்து சிக்கலில் இருக்கும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் : உதயநிதிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்!
சமீபத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களை லைக்கா தயாரித்து வருகிறது. இந்த படங்களை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்து வருகிறார்.
இந்நிலையில் லைக்காவில் அதிரடி சோதனை உதயநிதிக்கு வலை விரிக்க தான் என பலரும் கூறி வந்தனர். இப்போது மிகப்பெரிய அதிர்ச்சி தரும் விதமாக உதயநிதியின் அறக்கட்டளை சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை அமலாக்கத் துறையினர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த 25 ஆம் திகதி உதயநிதியின் பவுண்டேஷனின் அசையா சொத்துக்கள் 36.3 கொடி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பவுண்டேஷன் சார்பில் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சமும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லல் குழுமம் விவகாரத்தால் இந்த அதிரடி சோதனையை அமலாக்க துறையினர் நடத்தியதாக கூறி உள்ளனர். இதனால் செய்வதறியாமல் உதயநிதி மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இருக்கிறது.