அஜித்துடன் நடிக்க ரெஜினா வாங்கிய சம்பளம்…

அஜித்துடன் நடிக்க ரெஜினா வாங்கிய சம்பளம்…
  • PublishedFebruary 2, 2025

அடுத்த வாரம் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்  விடாமுயற்சி படம் திரைக்கு வரவிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் அஜித்தின் திரைப்படம் வெளிவரவுள்ளநிலையில், இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா என பலரும் நடித்துள்ளனர். ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் சம்பளம் விவரங்கள் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படும், நடிகை ரெஜினா, விடாமுயற்சி படத்திற்காக வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை ரெஜினா, இப்படத்திற்காக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *