சந்திரமுகி 2.. ஜோதிகாவையே மிரட்டும் கங்கனா போஸ்டர் இதோ….

சந்திரமுகி 2.. ஜோதிகாவையே மிரட்டும் கங்கனா போஸ்டர் இதோ….
  • PublishedAugust 5, 2023

சந்திரமுகி கடந்த 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி இருந்தாலும் கிட்டத்தட்ட இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதே வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.

சந்திரமுகி படத்தில் ஒரு சில வினாடிகளே வந்தாலும் வேட்டையன் ராஜா கேரக்டர் அப்போதே மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. அதேபோன்றுதான் சந்திரமுகியின் கேரக்டரும்.

அப்படி இருக்கும் போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்றதும் அதில் ரஜினி இல்லாதது பெரிய வருத்தமாக இருந்தது. இருந்தாலும் கடந்த வாரம் வெளியான ராகவா லாரன்ஸ் லுக்கை பார்த்துவிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் படத்தின் முக்கிய கேரக்டரான சந்திரமுகியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

லைக்கா பட தயாரிப்பு நிறுவனம் சந்திரமுகியின் லுக்கை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. நடிகை கங்கனா ரணாவத்தான் சந்திரமுகியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இந்த லுக்கில் கங்கனா பச்சை கலருடன் தங்க ஜரிகை நிறைந்த புடவையில் ஒரு பழங்கால ராணியின் தோற்றத்தோடு இருக்கிறார். ஆடை அணிகலன்களில் ராணியின் தோற்றம் இருந்தாலும் கண்களில் சோகம் மற்றும் கோபம் இரண்டையும் காட்டும் முகபாவனையில் எந்த சலனமும் இல்லாமல் ஒரு அறையில் நிற்பது போல் புகைப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *