ரெட்ரோ படத்தின் டப்பிங் பணிகள் முழுவதும் நிறைவு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’. அவருடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் பிஸ்னஸ் பணிகள் துவங்கி டிஜிட்டல்,
சாட்டிலைட் பிஸ்னஸ், தியேட்டர் பிஸ்னஸ் அனைத்தும் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றதாக அறிவித்துள்ளனர்.