பணமோசடி குற்றச்சாட்டில் அந்தர்பல்டி அடிக்கும் நடிகை ரிஹானா

பணமோசடி குற்றச்சாட்டில் அந்தர்பல்டி அடிக்கும் நடிகை ரிஹானா
  • PublishedJune 18, 2025

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ரிஹானா.

இவர், திருமணம் செய்ததை மறைத்து பணம் மோசடி செய்ததாக நடிகை ரிஹானா பேகம் மீது போலிசில் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ராஜ் கண்ணன் என்பவர் அளித்த புகாரில், தன்னுடன் நட்பாகப் பழகி வந்த ரிஹானா ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் விவாகரத்து ஆனதாகவும் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இதன்பின் ரிஹானாவுக்கு ரூ. 20 லட்சம் வரை பணம் செலவு செய்த நிலையில், அவரது வீட்டிற்கு சென்றபோது கணவருடன் விவாகரத்தாகாமலேயே தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாகவும் கூறி புகாரளித்திருந்தார்.

இதனைதொடர்ந்து ரிஹானா, ராஜ் கண்ணன் மீது பதிலுக்கு ஒரு புகாரளித்திருக்கிறார். அதில், ராஜ் கண்ணன் தன்னிடம் சுமார் 15 லட்சத்துக்கும் மேல் பிசினஸ் டெவலப் செய்ய வாங்கினார். நண்பர் வீட்டிற்கு கூட்டிச்சென்று, செயின் போட்டார்.

ஆனால் அவர் போட்டது இந்து தாலி போல் இருந்ததால் அதை கழட்டிவிட்டேன் என்று ரிஹானா கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *