ஹாலிவுட் பாடகி ரிஹானாவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்த அம்பானி! கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க….

ஹாலிவுட் பாடகி ரிஹானாவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்த அம்பானி! கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க….
  • PublishedMarch 1, 2024

முகேஷ் அம்பானியின் மகன், ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் அமெரிக்க நடிகையும், பாடகியுமான ரிஹானா ஆட்டம்… பாட்டம் என பர்ஃபாமென்ஸ் செய்ய, வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சன்ட்டை திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், தற்போது இவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3 வரை.. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த ஆடம்பர விழாவில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

சல்மான் கான், அமீர் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ்.தோனி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் தொடர்ந்து ஜாம் நகர் ஏர்போட்டுக்கு வந்து இறங்கியபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதற்கிடையில், மிகவும் பிரபலமான ஹாலிவுட் பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவும் நேற்று தன்னுடைய குழுவினருடன் வந்தார்.

இவர் வந்திறங்கிய போது… இவரை பார்த்து ஆச்சர்யப்பட்ட ரசிகர்களை விட இவரது லக்கேஜை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் தான் அதிகம், காரணம் அமெரிக்காவில் இருந்து நிரந்தரமாக இந்தியாவில் தங்க முடிவெடுத்து விட்டாரா? என ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவில் இவரது லக்கேஜ் பாக்ஸ் இருந்தது.

மேலும் நாளைய தினம் ரிஹானாவின், லைவ் டான்ஸ் அண்ட் சிங்கிங் ஃபர்பாமென்ஸ் இருக்கும் என கூறப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

அதாவது இவர் இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50 கோடியில் இருந்து 70 கோடி வரை இவர் சம்பளமாக பெற்றுள்ளாராம். இந்த தகவல் கேட்பவர்களுக்கே கிறுகிறுப்பை வரவைத்துள்ளது.

நடிகைகள் சிலர் படத்தில் ஆடுவதற்கு கூட அதிக பட்சம் 5 கோடி தான் சம்பளமாக வாங்குகிறார்கள்… ஆனால் ரிஹானாவுக்கு இவ்வளவு சம்பளமா என பலர் வாயை பிளந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *