கமல் – ரஜினி கூட்டணியில் இணையும் சாய் பல்லவி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கமல் – ரஜினி கூட்டணியில் இணையும் சாய் பல்லவி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • PublishedNovember 30, 2025

கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 173 படத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பதாக கூறப்படுகின்றது.

தமிழ் சினிமாவை தாண்டி பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி.

தமிழில் இறுதியாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர்173 படத்தில் சாய் பல்லவி நடிக்கிறாராம். முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்த படத்திலிருந்து சுந்தர் சி அதிரடியாக வெளியேறினார்.

இந்த நிலையில் தான் இந்தப் படத்தை இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சாய் பல்லவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே சாய் பல்லவி நடிப்பார்.

இந்த படத்திற்காக சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளை விட இது அதிகம் என்பது கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *