கத்தி குத்தில் இருந்து நடிகை கரீனா கபூர் கான் தப்பியது எப்படி?
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கொள்ளையன் ஒருவர், கத்தியால் குத்தியதாக வெளியான சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருடைய மனைவி கரீனா கபூர் கான் நேற்று இரவு வெளியே சென்றிருந்ததால் கத்திக்குத்தில் இருந்து தப்பியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் திரை உலகில், முன்னணி நடிகராக இருப்பவர் சைஃப் அலிகான். தொடர்ந்து ‘பான்’ இந்தியா திரைப்படங்களை தேர்வு செய்து, தென்னிந்திய மொழி படங்களிலும் முகம் காட்டி வரும் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில், கொள்ளை சம்பவம் அரங்கியது தான் பாலிவுட் திரையுலகில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
நடிகர் சைஃப் அலிகான் தன்னுடைய இரண்டு மகன்களுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அதிகாலை இரண்டரை மணி அளவில் ஏதோ சத்தம் கேட்டதை தொடர்ந்து, தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது தன்னுடைய வீட்டுக்குள் மர்ம நபர் யாரோ புகுந்ததை அறிந்த சைஃப் அலிகான் சத்தம் போட்டுக் கொண்டே, அவரை பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளையன் தன் கையில் இருந்த கூர்மையான கத்தி போன்ற ஆயுதத்தை பயன்படுத்தி சைஃப் அலிகான் உடலில் ஆறு இடங்களில் குத்தி விட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இரத்த வெள்ளத்தில் இருந்த சைஃப் அலிகான், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் காவல்துறையினர் வெளியிட்ட முதற்கட்ட தகவல் அறிக்கையில், வீட்டில் இருந்த மற்ற உறுப்பினர்கள் விழித்தெழுந்த பின்னரே அந்த கொள்ளையன் வீட்டை விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
மேலும் சைஃப் அலிகானை குத்துச்சென்ற மர்ம நபர் யார்? என்பதை போலீசார் வலைபோட்டு தேடி வருகின்றனர். சந்தேகப்படும் விதத்தில் இருப்பவர்களை கைது செய்து விசாரிக்கவும், பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரீனா கபூர், இந்த சம்பவத்தில் இருந்து தப்பியது எப்படி? என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சைஃப் அலிகான் தாக்கப்பட்ட அன்றைய இரவு, கரீனா வீட்டில் தங்கவில்லையாம்.
முக்கிய விஷயம் காரணமாக அவரின் சகோதரி மற்றும், சோனம் கபூருடன் தங்கி இருந்தாராம். ஒருவேளை வீட்டில், கரீனா இருந்திருந்தால், அவர் தாக்கப்பட்டவே வாய்ப்பு அதிகம் என்றும், அதிஷ்டத்தின் காரணமாகவே அவர் தப்பிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.