மீண்டும் சர்ச்சையில் சிக்கிய “லியோ” இப்ப என்னடா புது பிரச்சனை உங்களுக்கு?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படத்தில் வேலைப் பார்த்த லோகேஷின் உதவி இயக்குநர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.
லியோ படத்தால் தயாரிப்பாளருக்கு 100 கோடி ரூபாய் வரை லாபம் என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம் லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், சக்சஸ் மீட்டிங்கை பிரம்மாண்டமாக நடத்தியது படக்குழு. நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற லியோ சக்சஸ் மீட்டில், விஜய்யின் குட்டி ஸ்டோரியும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
லியோ வெளியாவதற்கு முந்தைய மாதமான செப்டம்பரில், லோகேஷின் உதவி இயக்குநர்கள் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருந்தனர்.
ஆனால், அந்த மாதத்திற்கான சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் இன்னும் வழங்கவில்லையாம். இதனால் லோகேஷ் கனகராஜ்ஜின் உதவி இயக்குநர்கள் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி’ பாடலில் நடனம் ஆடியவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என சர்ச்சையானது.
2000 குரூப் டான்ஸர்ஸுடன் பிரம்மாண்டமாக உருவான இந்தப் பாடலில், யூனியன் டான்ஸர்களைத் தவிர மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என புகார் எழுந்தது.
அதன்பின்னர் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்த நிலையில், தற்போது உதவி இயக்குநர்கள் தங்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக சொல்லி நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளனர்.