படத்தில் ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது…சல்மான் பேட்டி

படத்தில் ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது…சல்மான் பேட்டி
  • PublishedMarch 29, 2025

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான்கான். இவரது நடிப்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை(மார்ச் 30) திரைக்கு வரும் ஹிந்தி படம் ‛சிக்கந்தர்’. தமிழ் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்க, தமிழ் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் தொடர்பாக சல்மான் அளித்த பேட்டி…

சிக்கந்தர் படம் பண்ண ஸ்பெஷல் காரணம் ஏதுவும் உண்டா?சிறப்பு காரணம் ஒன்றுமில்லை. படத்தின் கதை எனக்கு பிடித்தது. நல்ல படத்திற்கான விஷயங்கள் எல்லாம் இதில் உள்ளது தான் சிறப்பு. குறிப்பாக படத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் உள்ளன. மேலும் ஆக்ஷன், ரொமான்ஸ் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வித்தியாசமான ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸை பார்க்கலாம். படத்தில் ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது.

ராஷ்மிகா உடன் நீங்கள் ஜோடியாக நடித்தது பற்றி விமர்சனம் வருகிறது, அதுபற்றி உங்கள் கருத்து?எதற்காக அப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை. புதிய நடிகைகள் உடன் தொடர்ந்து நான் பணி செய்கிறேன். இதனால் அவர்களின் வாழ்க்கையும், தொடர்ந்து அவர்களுக்கு பணியும் கிடைக்கும். இவர் மட்டுமல்ல, ஜான்வி கபூர், அனன்யா பாண்டே ஆகியோருடனும் பணியாற்ற விரும்புகிறேன். எதிர்காலத்தில் நடிப்பேன் என சரித்தபடி கூறினார்.

நீங்கள் சுயமாக உருவாகிய நட்சத்திரம் என்கிறார்கள், இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?என்னை பொருத்தவரை இந்த உலகத்தில் யாரும் சுயமாக உருவாக்கப்படுவது இல்லை. எல்லோருக்கும் ஒருவரின் தேவை இருக்கிறது. இன்று நான் எதுவாக இருந்தாலும் அதற்கு காரணம் என் தந்தை மட்டுமே. அவர் இந்தூரிலிருந்து மும்பைக்கு வராமல் இருந்திருந்தால் இன்று நான் இல்லை. என் தாத்தாவும் சிறந்த கலைஞர். அவர் மிகப்பெரிய கலைஞராக இல்லாவிட்டால், என் தந்தைக்கு மும்பையில் வேலை கிடைத்திருக்காது, அவரும் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.

உங்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றி?அடுத்து கிக் 2 படத்திற்கான திரைக்கதை பணிகள் நடக்கின்றன. இதுதவிர முழுநீள ஆக் ஷன் படம் ஒன்றிலும் நடிக்கிறேன். இதில் எனது மூத்த சகோதரர் போன்ற சஞ்சய் தத்தும் நடிக்க போகிறார். படத்தை யார் இயக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *