ரசிகர்களிடம் கோபமடைந்த சமந்தா… வைரலாகும் வீடியோ

ரசிகர்களிடம் கோபமடைந்த சமந்தா… வைரலாகும் வீடியோ
  • PublishedJune 18, 2025

நடிகை சமந்தா தற்போது பெரும்பாலும் மும்பையில் தான் வசித்து வருகிறார். அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறைவு தான்.

சமீபத்தில் தான் அவரது தயாரிப்பில் உருவான சுபம் என்கிற படம் வெளியானது. இன்னொரு பக்கம் அவருக்கும் பேமிலிமேன் வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நிடிமொருவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கடந்த ஒரு வருடமாகவே சொல்லப்பட்டு வருகிறது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மும்பையில் இருக்கும் சமந்தா ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்றிருந்தார்.

இதுபோன்ற சமயங்களில் அங்கே ஜிம்மிற்கு வரும் நட்சத்திரங்களை புகைப்படம் எடுப்பதற்காக போட்டோகிராபர்கள் காத்திருப்பர். சமந்தா எப்போதுமே இது போன்ற புகைப்பட கலைஞர்களுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்து விட்டு செல்வார்.

அப்படித்தான் இந்த முறையும் ஜிம்மிலிருந்து வெளியே வந்த போது அவருக்கு ஒரு போன் வந்தது. அந்த போனை அட்டென்ட் செய்து பேசியபடியே வந்தார்.

தனது கார் வேறு ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை கவனிக்காமல் போனில் பேசியபடி வந்தார். அவரை போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்க முற்பட்டனர். பின்னர் மீண்டும் ஜிம்முக்குள் நுழைந்து வேறு இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட தனது காரில் ஏறினார்.

அப்போதும் போட்டோகிராபர்கள் விடாமல் அவரை போட்டோ எடுக்க முயற்சித்த கடுப்பான சமந்தா, stop it Guy’s என வேகமாக காரில் ஏறி பறந்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *