சமந்தாவின் தந்தை திடீர் மரணம்! நெருங்கிய சமந்தா

சமந்தாவின் தந்தை திடீர் மரணம்! நெருங்கிய சமந்தா
  • PublishedNovember 29, 2024

நடிகை சமந்தாவின் தந்தை திடீரென இன்று காலமாகியுள்ளார். இந்த தகவலை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. கோலிவுட்டில் விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தற்போது வெப்சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த சமயத்திலே தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவிதாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர்.

நாக சைதன்யாவுடனான பிறவிற்கு பின், தொடர்ந்து படங்களில் நடித்த வந்த சமந்தா மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டார். இந்த தசை அழற்சி நோய்க்காக தீவிரமான சிகிச்சை எடுத்து வந்தார். இதனால் சினிமாவிற்கு சிறிது இடைவெளி விட்டு இருந்தார். இதனையடுத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள சமந்தா, தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தாவின் தந்தை இன்று திடீரென உயிரிழந்துள்ளார். தெலுங்கு – ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு மறைந்துள்ளதை ‘Until we meet again Dad’ என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

“மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா” என மிகவும் எமோஷனலாக தனது தந்தையின் மறைவை பற்றி குறிப்பிட்டுள்ளார்..

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சமந்தாவிற்கு சோஷியல் மீடியாவில் ஆறுதல் கூறி வருகின்றனர். அத்துடன் திரையுலகை சார்ந்தவர்களும் சமந்தாவின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *