சமந்தாவின் குஷி ரிலீஸ் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு – குஷியில் சாம் ரசிகர்கள்

சமந்தாவின் குஷி ரிலீஸ் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு – குஷியில் சாம் ரசிகர்கள்
  • PublishedMarch 23, 2023

சமந்தா நடித்திருக்கும் குஷி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது.

மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களது பிரிவு செய்தி ஒட்டுமொத்த திரையுலகிலும் பேச்சுபொருளாக மாறியது. திருமணத்திற்கு பிறகு சமந்தா தொடர்ந்து நடித்ததுதான் இருவரும் பிரிந்ததற்கு காரணம் என பல யூகங்கள் காரணங்களாக கூறப்பட்டன. ஆனால் எதற்காக பிரிந்தோம் என்பது குறித்து சம்பந்தப்பட்ட இருவருமே கூறவில்லை.

திருமண வாழ்க்கை முடிந்துவிட்டதால் அது கொடுக்கும் மன அழுத்தம் காரணமாக இனி சமந்தாவால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாது. எனவே சமந்தா எனும் நடிகையின் சகாப்தம் முடிந்துவிட்டதாக பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் அவர்களது பேச்சை அடித்து நொறுக்கும்படி சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கேரியர் கிராஃப் உச்சம் சென்றது.

Samantha Ruth Prabhu in Pushpa to Kareena Kapoor in “Fevicol Se”, here's what 5 actors charged for item numbers | GQ India

இப்படி அவரது கேரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரசிகர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைய தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.

சிகிச்சையிலிருந்து மீண்ட சமந்தா மீண்டும் நடிப்பில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.அந்தவகையில் அவர் நடித்த யசோதா படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேபோல் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய படங்களிலும் சமந்தா நடித்திருக்கிறார். இதில் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ம் திகதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகுந்தலம் படம் ஏப்ரல் படம் வெளியாகும் சூழலில் அவர் நடித்திருக்கும் குஷி படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில் குஷி படமானது செப்டம்பர் மாதம் 1ம் திகதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டரை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். குஷி படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்திருக்கிறார். அந்தப் படத்தை ஷிவ நாராயணா எழுதி இயக்கியிருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாவதால் சமந்தாவின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *