விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்… நொறுங்கியது கார்

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்… நொறுங்கியது கார்
  • PublishedAugust 28, 2024

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமான சம்பத் ராம் சென்ற கார் சென்னை கிண்டி அருகே விபத்துக்குள்ளாகி உள்ளது.

பின்னால் வந்த லாரி மோதியதில் இவருடைய காரின் பின்பக்கம் நொறுங்கிய நிலையில், காரில் பயணித்த சம்பத்ராம் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் வில்லன் மற்றும் போலீஸ் ரோலில் நடித்துள்ளவர் சம்பத் ராம்.

பார்ப்பதற்கு ஆறடி உயரத்தில், முரட்டு தனமான தோற்றத்தில் இருந்தாலும் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய ஒருவர்.

இதுவரை சுமார் 75க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள சம்பத் ராம், சமீபத்தில் தமிழில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *