தாயோட மார அறுத்துட்டு எப்படி சாப்பிட முடியும்? சூர்யாவுக்காக குரல் கொடுத்த சமுத்திரகனி
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு குவிந்த எதிர்மறையான விமர்சனங்கள் தன்னை ரொம்பவே பாதித்ததாகவும் அந்த மனுஷனை அது எந்தளவுக்கு பாதித்திருக்கும் என திரு. மாணிக்கம் படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சமுத்திரகனி எமோஷனலாகி விட்டார்.
தாயோட மார அறுத்துட்டு எப்படி சாப்பிட முடியும் என்றே சமுத்திரகனி சூர்யாவை கடுமையாக விமர்சித்தவர்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தனக்கு சினிமாவில் நேர்ந்த அவமானங்கள் குறித்து முன்னதாக சமுத்திரகனி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய நிலையில், தற்போது கங்குவா படத்துக்கு குவிந்த நெகட்டிவ் விமர்சங்கள் பற்றி புரமோஷன் பேட்டியில் பேசியுள்ளார்.
குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றுவதே தாய் தான். அந்த தாயோட மார அறுத்துட்டு எப்படி சாப்பிட முடியும். சினிமாவை நம்பி பிழைப்பு நடத்தும் பலரும் கங்குவா படத்தையும் சூர்யாவையும் கடுமையாக விமர்சித்து அந்த பணத்தில் எப்படித்தான் சாப்பிடுகின்றனரோ என தெரியவில்லை என சமுத்திரகனி பொங்கிவிட்டார்.
என் தம்பி சூர்யா லேசு பட்ட ஆள் இல்லை, நிச்சயம் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவான். அவன் செய்த நன்மைகள், அறத்தோடு வாழும் வாழ்க்கை, எத்தனை பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கிறான். அதையெல்லாம் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் எப்படித்தான் மோசமாக பேசத் தோன்றுகிறதோ என தனது படத்தின் புரமோஷனுக்காக வந்ததையே மறந்துவிட்டு புலம்பித் தள்ளிவிட்டார் சமுத்திரகனி.