கொரோனா லாக்டவுனில் வெளிவந்த உண்மை… சம்யுக்தா வாழ்வில் நடந்தது என்ன?

கொரோனா லாக்டவுனில் வெளிவந்த உண்மை… சம்யுக்தா வாழ்வில் நடந்தது என்ன?
  • PublishedMarch 22, 2024

பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் சம்யுக்தா. கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு ரயான் என்கிற மகனும் இருக்கிறார்.

தற்போது தனது மகனுடன் தனியாக வசித்து வரும் சம்யுக்தா, தன் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது கணவர் உடனான பிரிவு குறித்து முதன்முறையாக மனம் விட்டு பேசி உள்ளார் சம்யுக்தா.

சம்யுக்தாவின் கணவர் கார்த்திக் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் வேறொரு பெண்ணுடன் 4 வருஷமாக தொடர்பில் இருந்தது கொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் சம்யுக்தாவுக்கு தெரியவந்திருக்கிறது.

கணவரின் இந்த செயலால் மனமுடைந்து போன சம்யுக்தா என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தாராம். அது கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயம் என்பதால் அந்த நேரத்தில் தன்னால் துபாய்க்கு கூட செல்ல முடியாமல் போனதாக சம்யுக்தா கூறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் தான் பாவனாவின் நட்பு சம்யுக்தாவுக்கு கிடைத்திருக்கிறது. சம்யுக்தா வசிக்கும் அப்பார்ட்மெண்ட் அருகில் தான் பாவனாவின் மாமனார் மாமியார் வசித்து வந்துள்ளனர்.

அவர்களை பார்க்க வரும்போது தான் பாவனாவுக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் நெருங்கி பழக தொடங்கியதும் ஒரு நாள் வாக்கிங் போகலாம் என சம்யுக்தாவை அழைத்தாராம் பாவனா.

அப்போது என் பேமிலி பற்றியும் கணவர் பற்றி சம்யுக்தாவிடம் அவர் கேட்டிருக்கிறார். அவரிடம் தன் வாழ்க்கையில் நடந்தவற்றையெல்லாம் கூறி அழுதிருக்கிறார் சம்யுக்தா.

அதன்பின்னர் அவரை சமாதானப்படுத்திய பாவனா, சம்யுக்தாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் பரிந்துரை செய்திருக்கிறார். அவரால் தான் தன்னுடைய வாழ்க்கையே மாறியதாகவும், கடவுள் எனக்காக அனுப்பி வைத்த ஏஞ்சல் தான் பாவனா என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார் சம்யுக்தா.

கணவர் என்னைவிட்டு பிரிந்து சென்றதை தற்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறிய சம்யுக்தா, அவர் ஏன் இப்படி செய்தார் என சில நேரம் யோசிப்பதாகவும் கூறி இருக்கிறார்.

மேலும் தன் மகன் அவ்வப்போது அப்பா எங்கனு கேட்கும்போது, அவர் வேலைல இருக்காரு, அவரால் இந்தியா வர முடியவில்லை என்று சொல்லிவிடுவேன் என எமோஷனலாக பேசி உள்ளார்.

கணவர் பிரிந்து சென்றபின்னர் ஏன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த சம்யுக்தா, முதல் திருமணத்திற்கே இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை என கூறிய அவர், தன் கணவர் வெளிநாட்டில் இருந்துகொண்டு வர மறுப்பதனால் இதுவரை விவாகரத்து பெற முடியவில்லை என தெரிவித்துள்ளார். எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தும் அவர் செவி சாய்க்கவில்லை என வேதனையுடன் கூறி இருக்கிறார் சம்யுக்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *